சனி, நவம்பர் 26, 2005

விவசாயி

கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு. விவசாயமே கிராமத்தின் உயிர் நாடி.விவசாயியே விவசாயத்திற்க்கு ஆதாரம். இதுதான் உண்மையெனில் எப்பொழுது விவசாயி தன்னையே இழக்கின்ற நிலைமை உருவாக்கப்படுகின்றதோ அப்பொழுது விவசாயமும் அழிந்து போவதில் வியப்பேதும் இல்லையே. விவசாயம் அழிக்கப்படும் சூழலில் கிராமங்கள் அழிவதும் உறுதியே. கிராமங்களின் அழிவு நாட்டின் முதுகெலும்பு முறிக்கப்படுவதற்கான காரணீயாக உள்ள நிலையில் நாடே அழிவை நோக்கி செல்லும் என்பது உண்மையல்லவா. எனது இந்திய நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வறுமைக்கும்,மானத்திக்கும் அஞ்சி தனது உயிரையே இழக்க துணிந்து விட்ட விவசாயிகளின் நிலைமை எவ்வளவு பரிதாபதிற்குரியது என்பதை நினைக்கும் போது என் நெஞ்சு பதறுகிறதே. நாட்டின் அழிவுக்கே வழி கோலும் இத்தகைய மரணங்களை தடுக்க விவசாயிகளின் பால் உண்மையான அக்கறை கொண்டோர் ஒருவருமில்லையே.

3 கருத்துகள்:

ENNAR சொன்னது…

உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது
எங்கள் வாழ்வைப்பற்றி தெளிவாக எடுத்துக்காட்டியதற்கு நன்றி பால

ஸ்ரீ சொன்னது…

நன்றி என்னார் அவர்களே, எனது முதல் வலைப்பூ குறித்து உங்களின் கருத்திற்கு.எங்கள் வாழ்வு பற்றி என குறிப்பிட்டு உள்ளீர்கள்.நம் வாழ்வும் அதேதான் என்னார். நன்றி

ஸ்ரீ சொன்னது…

சதீஷ் அவர்களே வருக வருக