சனி, டிசம்பர் 17, 2005

சிந்திக்க

விவசாயிகளே, இந்த செய்திகளை பாருங்கள்,அணியிலிருந்து ஒரு கிரிக்கெட் வீரரை நீக்கியதற்காக ஒரு மாநிலத்தில் காவல்துறை பாதுகாப்போடு ரயில் மறியல், பஸ் மறியல் ,கொடும்பாவி எரிப்பு போராட்டங்கள் . பத்திரிக்கைகளில் , தொலைக்காட்சிகளில் முக்கியதுவம் கொடுத்து பரபரப்பு செய்திகள். அரசியல் கட்சிகளின் அறிக்கைகள். அனைத்தையும் விட பாராளுமன்றத்தில் விவாதிப்போம் என அறிவிப்பு.

இதோ இன்னொரு செய்தி.

தன் வாழ்க்கைக்கே ஆதாரமாயுள்ள விவசாய நிலத்தை கார் தொழிற்சாலைக்கு கையகப்படுத்துவதை எதிர்த்து சென்னைக்கு அருகே போராட்டம் நடத்திய அப்பாவி விவசாயிகள் மீது தடியடி ,20 பெண்கள் உட்பட 50 பேர் கைது. இந்திய விவசாயிகளின் பரிதாப நிலைக்கு இது சிறிய உதாரணம்.ஆண்டுதோறும் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மடிந்துகொண்டிருக்க எந்த பிரச்சினை குறித்து பாராளுமன்றம் விவாதிக்கவேண்டும்? தன் உயிரையே இழக்கும் விவசாயிகளின் பிரச்சினைகளை பற்றியா? அல்லது பொழுதுபோக்கு அம்சமான விளையாட்டில் உள்ள பிரச்சினையா?முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

4 கருத்துகள்:

rnatesan சொன்னது…

எனதுக் கவலையும் அதுதான்.நாடு எங்கு செல்கிறது என்றுப் புரியவில்லை.உங்கள் பக்கத்தை குறித்து தினமலரில் பார்த்தேன்.மிக்க மகிழ்ச்சி.நானும் விவசாயக் குடும்பம்தான்.இப்போ எல்லாத்தையும் விட்டாச்சு!

ஸ்ரீ சொன்னது…

ஐயா, தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.எதிர்காலம் விவசாயிகளின் காலமாக இருக்கவேண்டுமென்றே ஆசைப்படுகிறேன்

Unknown சொன்னது…

ஸ்ரீ,
உங்கள் கவலையும் ஆதங்கமும் புரிகிறது.
விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..
உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

ஸ்ரீ சொன்னது…

பலூன் மாமாவிற்கு ,தங்களின் வாழ்த்துக்களுக்கு இதயம் கனிந்த நன்றி.ஒரு சிறிய கிராமத்திலிருந்து எனது பதிவுகள் என்பதால் கணிணியில் ஏற்பட்ட சிறு பிரச்சினையால் சரிசெய்ய காலதாமதம் ஏற்பட்டதால் உங்களின் வாழ்த்துக்களுக்கு உடன் பதிலளிக்க முடியாமைக்கு மன்னிக்கவும்.மிக்க நன்றி.