செவ்வாய், மார்ச் 21, 2006

விவசாயிகளின் நிலைமை

எதிர்பார்த்ததை போலவே கிட்டத்தட்ட ஏக்கருக்கு 20 டன் கரும்பு மகசூல் இழப்பு ஏற்பட்டு ஏக்கருக்கு சுமார் ரூ 20000/- இவ்வருடம் நட்டம்.எங்கள் பகுதியில் உள்ள பல விவசாயிகளின் நிலைமை இதேதான்.ஏன் தமிழக விவசாயிகள் பெரும்பான்மையோரின் நிலைமையும் இவ்வாறே உள்ளது.உதாரணத்திற்கு சமீபத்தில் திருநாங்கூர் கிராமம் செல்ல நேர்ந்தது.அங்குள்ள ஒரு விவசாய நண்பர் வீட்டில் தங்கியிருந்த போது அவர் அளித்த தகவலோ இன்னும் வேதனையானது.என்னவெனில் அவர் நெல் பயிரிட்டதில் அவருக்கு கிடைத்த மகசூலோ ஏக்கருக்கு இரண்டே மூட்டையாம்.நட்டமோ ஏக்கருக்கு சுமார் ரூ15000/-. இந்தியாவில் பல மாநிலங்களில் பெருமழை காரணமாக பெரும்பான்மை விவசாயிகள் இத்தகைய இழப்புக்களை எதிர்கொண்டு செய்வது அறியாது திகைத்து நிற்க விவசாயிகளின் வாழ்க்கையை பற்றியோ,அவர்களின் துயரங்களை பற்றியோ,அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தோ சிறிதும் கவலைப்படாது இதோ ஆண்டுகள் தோறும் பாராளுமன்றத்திலே தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஒரு உதவியுமின்றி. இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்காக ஏதாவது உண்மையில் செய்யப்பட்டுள்ளதா என சல்லடை போட்டு தேடிப்பார்க்கும் முன் எனக்கு ஒரு பெரிய ஆசை என்னவென்றால் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகளை பெரும்பான்மையாக கொண்டுள்ள இந்த தேசத்தில் சென்ற ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் பயனாக எத்தனை விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்பட்டன? எந்த விவசாய இயந்திரம் விலை குறைக்கப்பட்டது?எந்த விவசாய விலைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிட்டியது?எத்தனை விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன?எத்தனை விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது?எத்தனையோ கேள்விகள் என் மனதில்.பணம் கொடுத்தாவது கேள்வி கேட்டு பதில் பெறலாமென்றாலும் அதற்கும் வசதியில்லை.பதில் சொல்லத்தான் யாருமில்லை? (காய்ந்து விட்ட கரும்பை பலப்பல சிரமங்களுக்கிடையில் அறுவடை செய்ய பெரும்பகுதி நேரம் செலவழிந்துவிட , ஆர்வமிருந்தும் வலைப்பதிய நேரமின்மையால் இந்த கால தாமதம்).

12 கருத்துகள்:

Voice on Wings சொன்னது…

உங்கள் சொந்த இழப்புகள் குறித்த தகவல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. ஆறுதல் கூறுவதற்கும் வார்த்தைகளில்லை. விரைவில் உங்களைப் போன்ற விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்.

டண்டணக்கா சொன்னது…

Sree,

Your blog is very nice in content. I would like to invite you to join as a author in my new blog about "farming and farmers" - http://tamilfarmers.blogspot.com. I feel you can make a terrific contribution and combined together we can present our content more effective through multi-author blog. I appreciate if you can join as author and give your contribution on this effort.

Thanks.

ஸ்ரீ சொன்னது…

வணக்கம், வாய்ஸ் ஆப் விங்ஸ், தங்கள் வருகைக்கும்,இனிய கருத்திற்கும் ,அன்பிற்கும் மிக்க நன்றி.

ஸ்ரீ சொன்னது…

டண்டணக்கா அவர்களே, உங்கள் முயற்சிக்கும், அழைப்பிற்கும் இதயம் கனிந்த நன்றி.

டண்டணக்கா சொன்னது…

Sree, I need your email address to send the invitation. If you need privacy, please send email to "dandanakka_blog@yahoo.com".
Thanks.

rnatesan சொன்னது…

கோபி அவர்களே,
உங்கள் கவலையும் அக்கறையும் புரிகிறது!!தஞ்சை மாவட்டம் தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த நாங்கள் முப்போகம் விளையும் விவசாயத்தை விட்டு விட்டு இடம் பெய்ர்ந்தவர்கள் நாங்கள்!! ஏன் எவருக்கும் அக்கறையில்லை!!அரசியல்வாதிக்கோ ,அரசாங்கத்திற்கோ விவசாயியின் மேல் அக்கறையில்லை!!
நிறைய மாற்றங்கள் வரவேண்டும்!!
வருமா!!

ஸ்ரீ சொன்னது…

மிக்க நன்றி ஐயா, நீங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதில் எனக்கும் பெருமையே.மாற்றங்கள் காலத்தின் கட்டாயம் என்ற நம்பிக்கையில்தான் எவ்வளவு இழப்பிலும் தமிழக விவசாயிகள் மற்ற மாநில விவசாயிகளை போல தற்கொலை வரை செல்லவில்லை என்பது எனது கருத்து.

Sivabalan சொன்னது…

Good blog!!!

Machi சொன்னது…

உழுதவன் கணக்கு பார்த்தா உலக்கையும் (ஒரு அலக்கு) மிஞ்சாது. - பழமொழி.
விளைஞ்ச வெள்ளாமைக்கு விலை நிர்ணயம் பன்ற உரிமை கிடையாது, தரகர் வைக்கிற விலை தான். சரி குறைஞ்ச விலைக்கு வாங்குனது குறைஞ்ச விலைக்கா நுகர்வோருக்கு கிடைக்குது அதுவும் கிடையாது. எல்லாம் நடுவுல இருக்குற தரகுக்கு போகுதய்யா போகுது.
அரசாங்கம் விவசாய துறையில் பண்ண வேண்டிய சீர்திருத்தம் ஏகப்பட்டது இருக்கு.

பெயரில்லா சொன்னது…

என்ன எழுதுவது என்று தெரியவில்லை, இதற்கு ஏன் ஒரு நல்ல விவாதம் மற்றும் தீர்வு ஏற்படவில்லை. மன்னிக்கவும் நானும் இன்று தான் இதை பார்த்தேன். நண்பர்களே இதை விவாதிப்பதற்கும் சிறிது நேரம் செலவிடுவோம் வாருங்கள்.

ஸ்ரீ சொன்னது…

மிக்க நன்றி குறும்பன் அவர்களே,உங்களின் உணர்வுகள் நாட்டை ஆள்பவர்களிடம் இல்லையே?என்ன செய்வது.

ஸ்ரீ சொன்னது…

நன்றி ச்ரீதர் ,தீர்வுகள் விவசாயிகளின் ஒற்றுமை, விழிப்புணர்வு இவைகளால் மட்டுமே சாத்தியம்.