ஞாயிறு, ஜூன் 14, 2015

’தலை’யானபிரச்னை

இன்று பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது பற்றி ,
மாண்புமிகு உயர்நீதிமன்றம் தலைகவசம் அணிவதை கட்டாயமாக்க உத்தரவிட்டுள்ளது.விபத்தின்போது தலைக்கவசம் ஓட்டுனரை விபத்திலிருந்து பாதுகாக்கிறது என்பதில்  எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் உயிரை பாதுகாக்கவேண்டும் என்பதைபொறுத்து இந்த உத்தரவு வரவேற்கப்பட வேண்டியதே.

ஆனால் என்னுள் எழும் சில  கேள்விகள்.

1)மது அருந்துவது உடல் நலத்துக்கு தீங்கானது உண்மையெனில் ஏன் அரசே
” டாஸ்மாக்” திறந்து பொதுமக்களுக்கு தீங்கான விஷயத்தை அளிக்க வேண்டும்.
2)இருசக்கர வாகனத்தில் இருவருக்குமேல் செல்லக்கூடாது.சென்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் 55 பேர் பயணம் செய்ய கூடிய பேரூந்தில்  அதற்கு மேலும் பயணம் செய்வது நாம் தினசரி பார்க்கும் நிகழ்வுதானே? இது ஆபத்தில்லையா?

பொதுவாக விபத்து நிகழும் காரணிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினாலே பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படும். அரசு இவற்றிக்குதான் ’தலைகவச’த்தை விட முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பதே என் கருத்து.அத்தகைய காரணிகளில் முக்கியமானவைகள்,

1)நல்ல பயணத்துக்கு முக்கியமானது சாலைகளே, பயணிக்க லாயக்கற்ற பழுதடைந்த சாலைகளை உடனுக்குடன் சீர்செய்வது.

2) சாலைகளில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது ,ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவது,கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது,சாலை விதிகளைபற்றி கவலைப்படாது வாகனம் ஓட்டுவது போன்றவற்றை கடுமையான சட்டங்கள் மூலம் முழுமையாக தடுத்தாலே விபத்துக்கள் நிச்சயம் தவிர்க்கப்படும்.

3)அனைத்திற்கும் மேலாக குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை கடுமையான குற்றமாக்கி தடுத்து விட்டாலே பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுவிடும்.
 இவைகள் நிறைவேறும் காலம் கனியும் போது ’தலை’க்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடுமல்லவா?


2 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல கருத்து! வரவேற்கத் தக்கது! பின் பற்றப்பட வேண்டும்

ஸ்ரீ சொன்னது…

மிக்க நன்றி ஐயா,எரிவதை நிறுத்தினால் கொதிப்பது தானாக அடங்கிவிடும். அனால் இங்கோ பெரும்பாலான பிரச்சினைகளுக்கு எரிவதை மேலும் தூண்டிவிட்டு கொதிப்பதை அடக்க அரசுகள் முடிவெடுக்கின்றன.