ஞாயிறு, நவம்பர் 30, 2014

கிரிக்கெட்-தேவையா?

பவுன்சர் என்ற எமன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸ் உயிரை பறித்தது மிகவும் வருத்தப்படவைத்தது. பொதுவாகவே எனக்கு  கிரிக்கெட்டில் அனைவரையும் போல அதீத ஆர்வம் இருந்த தருணங்கள் தற்போது இல்லை.

எப்பொது கிரிக்கெட்டில் சூதாட்டமும் ஊழல்களும் ஆரம்பித்தனவோ அன்றிலிருந்தே அதன் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு மிக அதிக முக்கியத்துவம் தரப்படுவது அவசியமற்றது என்பதே என் கருத்து.

வீரர்களை அரங்கில் உற்சாகப்படுத்த  வெளிநாட்டு அழகிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அளவிற்கு செல்வது தேவையா?பொதுவாக விளையாட்டு விளையாட்டாகவே இருக்கவேண்டும்.அழகாக சுழலும் சுழல் பந்துவீச்சில் இருக்கும் நளினம் உயிரை பறிக்கும் வேகப்பந்து வீச்சில் உண்டா? தேவையெனில் வேகப்பந்து வீச்சை கிரிக்கெட்டில் தடை செய்வது கூட அவசியம் என்பதே என் கருத்து.

4 கருத்துகள்:

காரிகன் சொன்னது…

நண்பரே,

ஒரு சிறு திருத்தம். கிரிக்கெட்டையே தடை செய்ய வேண்டும் என்பது என் கருத்து. பல நல்ல உண்மையான விளையாட்டுகள் நம் நாட்டில் இதனால் புத்துயிர் பெறும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…


அப்பா ஆபத்தான விளையாட்டுதான். இப்போது நினைத்தால் குலை நடுங்குகிறது முன்னர் கிரிக்கட் பாலில் நெற்றியில் அடிபட்டு ஏழு தையல்கள் போட வேண்டி நேர்ந்தது.அப்போது அச்சம் ஏதுமில்லை.
ஹ்யூசின் மரணம் வருத்தத்தை உண்டாக்கி விட்டது.

ஸ்ரீ சொன்னது…

அன்பு வணக்கம் முரளிதரன் அவர்களே,கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் அதீத விளம்பரங்கள் இந்த விளையாட்டிற்கு ஒரு கவர்ச்சியை செயற்கையாக உருவாக்கிவிடுகின்றன.இந்த கவர்ச்சி எனும் மாயையிலிருந்து சமூகம் விடுபடவேண்டும்.

ஸ்ரீ சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி காரிகன் அவர்களே,(கிரிக்கெட்டையே தடை செய்ய வேண்டும் என்பது என் கருத்து) உண்மைதான். இப்பொழுதெல்லாம் இந்த விளையாட்டு அமைப்புகளில் நடைபெரும் நிகழ்வுகளை காணும் போது உங்கள் கருத்து மிக்க பொருத்தமே.