விவசாயிகளுக்கு வங்கிகளில் பல்வகை கடன்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.இதில் முக்கியமானவை நகைக்கடன், மற்றும் பயிர்க்கடன்.
இவற்றில் முதலில் 9% சத வட்டிவீதமாக நிர்ணயிக்கப்பட்டு பின் 2%சதம் அரசால் மானியமாகவும் பின்பு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒழுங்காக கடனை திருப்பிசெலுத்தும் விவசாயிகளுக்கு மேலும் 3% சத வட்டி அரசால் மானியமாக வழங்கப்பட்டு இறுதியில் 4% சத வட்டி வீதத்தில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டுவருகிறது.
பிரச்சினையே இங்குதான் ஆரம்பம். வங்கிகள் தங்களுக்கு நிர்ணயிக்கபட்ட விவசாய கடன் இலக்கை அடைய பெரும்பாலும் நகைகடன் கொடுத்து அந்த இலக்கை அடையவும் , மேலும் விவசாயிகள் தவிர மற்றவர்களுக்கும் இந்தவகையில் கடன் அளித்து இலக்கை அடைவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது.மேலும் பல காரணங்களை காட்டி அரசாங்கம் அளிக்கும் வட்டி மானியத்தை விவசாயிகளுக்கு அளிக்காமல் எமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.இதனால் உண்மையான விவசாயிகளுக்கு கடனும், அரசின் பயனும் கிடைப்பதில்லை.
உண்மையான விவசாயிகளுக்கு தேவையான கடன் தொகை,அரசாங்கம் அளிக்கும் வட்டிச்சலுகை விவசாயிகளுக்கு சரியாக சென்று சேர தேவையான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு ரிசர்வ்வங்கி விவசாயிகளுக்கான கடன் வட்டியை 11% ஆக உயர்த்தி பிரச்சினையை முடிக்க நடவடிக்கை எடுப்பது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் (--------)செயலாக உள்ளது.