திங்கள், நவம்பர் 28, 2005

வெள்ளம்

தமிழகம் இதுவரை கானாத வெள்ளப்பெருக்கு, உயிரையும் இழந்தோர் பலர், பலப்பல கனவுகளோடு ஆசை ஆசையாய் உழுது பயிரிட்ட பயிர்களையும், உடைமைகளையும் இழந்து
தவிக்கும் அனைவருக்கும் இவற்றை எதிர் கொள்ளக்கூடிய சக்தியை அளித்தருளுமாறு இறைவனிடம் வேண்டுகிறேன்.இந்திய நாடு இக்கட்டான சூழ்நிலையை கடந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன் எதிர் வரும் காலங்களில் அரசியல் மாற்றங்களும், இயற்கை சீற்றங்களாலோ,வன்முறையாலோ பேரிழப்பை எதிர்கொள்ள கூடிய சூழல் இருப்பதாக எண்ணுகிறேன்.

சனி, நவம்பர் 26, 2005

விவசாயி

கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு. விவசாயமே கிராமத்தின் உயிர் நாடி.விவசாயியே விவசாயத்திற்க்கு ஆதாரம். இதுதான் உண்மையெனில் எப்பொழுது விவசாயி தன்னையே இழக்கின்ற நிலைமை உருவாக்கப்படுகின்றதோ அப்பொழுது விவசாயமும் அழிந்து போவதில் வியப்பேதும் இல்லையே. விவசாயம் அழிக்கப்படும் சூழலில் கிராமங்கள் அழிவதும் உறுதியே. கிராமங்களின் அழிவு நாட்டின் முதுகெலும்பு முறிக்கப்படுவதற்கான காரணீயாக உள்ள நிலையில் நாடே அழிவை நோக்கி செல்லும் என்பது உண்மையல்லவா. எனது இந்திய நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வறுமைக்கும்,மானத்திக்கும் அஞ்சி தனது உயிரையே இழக்க துணிந்து விட்ட விவசாயிகளின் நிலைமை எவ்வளவு பரிதாபதிற்குரியது என்பதை நினைக்கும் போது என் நெஞ்சு பதறுகிறதே. நாட்டின் அழிவுக்கே வழி கோலும் இத்தகைய மரணங்களை தடுக்க விவசாயிகளின் பால் உண்மையான அக்கறை கொண்டோர் ஒருவருமில்லையே.