வெள்ளி, ஜனவரி 27, 2006

சோதனை

வெள்ள பாதிப்புகளிலிருந்து தமிழகம் மெல்ல மீண்டுவந்தாலும் விவசாயிகளை பொருத்தவரை பாதிப்பு முற்றிலும் நீங்காது இன்னும் தொடர்வது வேதனையான விஷயமே. என் நிலைமையை போலவே சில விவசாயிகளின் நிலைமையும் இதற்கு சிறு உதாரணம்.பொதுவாக இந்த வெள்ளத்தில் ஓரளவுபாதிப்பு எங்கள் கிராமத்தில் இருந்ததில் எங்கள் நிலம் சற்றே தாழ்வான பகுதியில் உள்ளதாலும் மழையினால் சுமார் ஒரு மாதகாலம் தொடர்ந்து தண்ணீர் கரும்பு பயிரில் தேங்கியதாலும் அதன் பாதிப்பு தற்போதுதான் தெரியவருகிறது. கரும்பு வெட்ட வேண்டிய இந்த தருணத்தில் பரவலாக காய்ந்து கட்டையாகிவிட்டது.இவ்வருடம் வங்கியில் உச்சபட்ச கடன் பெற்றுள்ள நிலையில் எப்படியாவது நன்குகரும்பை பாதுகாத்து அதிக மகசூல் எடுத்தேஆக வேண்டிய கட்டாயத்தில் நன்றாகவே கரும்பை கவனித்து வந்தோம்.முடிந்தவரை அனைத்து பராமரிப்புகளையும் செய்து 7 மாத காலத்தில் எதிர்பார்த்ததை போலவே நன்றாகவே இருந்தது.அதன் பின் பெய்த தொடர் மழையினால் தற்போது கரும்பு காய்ந்து வருவது வேதனையாகவே உள்ளது.எப்படியும் 50%சத மகசூல் இழப்பு நிச்சயமே.விவசாய வருமானத்தை மட்டில் நம்பியுள்ள நிலையில் இந்த இழப்பை ஈடு செய்ய எத்தனை காலமாகுமோ தெரியவில்லை? இயற்கை சீற்றத்தின் கரங்களின் மிதமான தாக்கத்திற்கே எனக்கு மனதில் இந்த சோகம் இழையோடும்போது அவற்றின் கடும் தாக்கத்திற்கு ஆளாகி முற்றிலுமாக விளைச்சலை இழந்து வாடும் விவசாயிகளின் நிலைமையை சற்றே மனத்திரையில் காணும்போது என்னையுமறியாமல் என் விழிகள் குளமாகி கரையைத்தாண்டி ஓடும் வெள்ளமென என் விழித்திரைகளை மீறி வழியும் கண்ணீர்த்துளிகளை கட்டுப்படுத்த ஏனோ என்னால் இயலவில்லை.இவை ஒருபுறமிருக்க மக்கள் வேதனையில் வாடும் தருணத்தில் ஒன்றுபட்டு மக்களின் துயரை களைய கடமைப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் இங்கே வேறுபட்டு நிற்பது வேதனையான விஷயம்.தமிழகம் காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசிடம் மாண்புமிகு தமிழக முதல்வர் ரூ13000 கோடி நிதிஉதவி கேட்க ரூ1000 கோடி மட்டுமே நிதிஉதவி கிட்டியது.இதைக்கொண்டு பாதிக்கபட்டோர்களுக்கு பல இடைஞ்சல்களுக்கு மத்தியில் தமிழக அரசால் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதை பாராட்டியே தீரவெண்டும். முதல்வர் சட்டசபையில் பேசும்போது தமிழக அரசிற்கு நற்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் மத்திய அரசு நிதிவழங்க தடைசெய்வதாக எதிர்கட்சி மீது குற்றம் சுமர்த்தியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தமிழக அரசே நிவாரணம் வழங்கும் என்றும் கூறியுள்ளார்கள்.மேலும் உழவர் பாதுகாப்பு திட்டம்,கரும்பிற்கு டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ1000/-,போன்ற அறிவிப்புகளையும் மாண்புமிகு தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்கள்.இவைகளெல்லாம் வரும் தேர்தலை மனதில் வைத்து கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன.கரும்பு டன்னுக்கு ரூ1000/- என இப்போதய எதிர்கட்சி ஆளும் கட்சியாக சென்றமுறை பதவியில் இருந்தபோதும் அறிவிப்பு வெளியிடப்பட்டது நினைவிற்கு வருகிறது.இது குறித்து விவசாயிகள் நம்பிக்கையோடு இருந்தபோது 10% சத சர்க்கரை கட்டுமானத்திற்குதான் இந்தவிலை என பின்னரே விவசாயிகள் அறிந்து ஏமாற்றமடைந்ததும் உண்மையே.ஏனெனில் 10% சத சர்க்கரை கட்டுமானம் ஓரிரு ஆலைகளில் மட்டுமே கிடைக்கும்.அந்த அறிவிப்பால் 1% சத வீத கரும்புவிவசாயிகளாவது அப்போது பயனடைந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே.இப்போதய அறிவிப்பிலும் எனக்கு அந்த சந்தேகம் தோன்றியது.ஆனால் முதல்வர் அவர்கள் தனியார் ஆலை நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களும் தமிழக அரசு அறிவிக்கும் விலையை அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதென தெரிவதால் நிச்சயம் 100 %சத கரும்பு விவசாயிகளுக்கும் இந்த விலை கிடைக்கும் என உறுதியாய் தெரிகிறது.மேலும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கோரிக்கைகள் உடனுக்குடன் பெற்று பரிசீலிக்கப்பட்டு உதவிகள் விரைவில் வழங்கப்பட்டு,எங்கள் கிராமத்திலே கூட பலர் பயன்பெற்றிருப்பதை கண்கூடாக காண்பதில் விவசாயி என்கின்ற வகையில் மகிழ்வடைகிறேன். வேதனையில் உருவான விவசாயிகளின் மனப்புண்ணிற்கு இவை மருந்தாகுமென்பதில் ஒருவகையில் மனநிறைவே என்றாலும் தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான விவசாயிகள் வரலாறு காணாத பெருமழையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளின் இழப்பை ஒரளவிற்காவது ஈடு செய்ய இந்த வருடம் வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து பயிர்கடன்களையும் மத்திய அரசே ஈடுசெய்யவேண்டுமென்னும் விவசாயிகளின் கோரிக்கை முற்றிலும் நியாயமே.தமிழகத்தில் உள்ள அனைத்து 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒரே கூட்டணியை வெற்றி பெற வைத்து,அதற்கு கூட்டணி ஆட்சி அமையபெற்றுள்ள மைய அரசில் முக்கிய இடம் கிடைக்க காரணமான தமிழக மக்களின் வேதனையான இந்த தருணத்தில் விடுக்கப்படும் இத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்றிதரும் பொறுப்பு இந்த கட்சிகளுக்கு உண்டு என்றும், நிச்சயம் நிறைவேற்றிதருவார்கள் எனநம்பிக்கையுடனும் விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

3 கருத்துகள்:

rnatesan சொன்னது…

தஙத்தின் விலையை மட்டும் யார் நிர்ணயிக்கிறார்கள் என்றுத் தெரியவில்லை!என்ன கோபி சார் எங்கே காணும்??எங்கே போயிட்டிங்க??

rnatesan சொன்னது…

ஆக்கப் பூர்வமானக் கட்டுரை.மிக்க நன்றி.தங்களுக்கு சொந்த ஊர் எது?தஞ்சை மாவட்டமா>?

வீரமணி சொன்னது…

வணக்கம் சார்....தங்கள் அனைத்து கட்டுரைகளையும் படித்தேன்...மிகவும் நெகிழ்ந்தேன்.....விவசாயிகளின் வலியை மிகந்த கோபத்துடன் சொல்ல வேண்டிய வார்த்தைகளால் சொல்லியிருந்தீர்கள்..உங்கலை அறிமுகப்படுதிய மா.சிவக்குமாருக்கு ரொம்ப புண்ணியம்...........நிறைய எழுதுங்கள்..............
நிறைய அன்புடன்
வீரமணி