ஞாயிறு, ஜூன் 25, 2006

மகிழ்ச்சி

நாட்டுமக்களின் தேவையையும்,எதிர்பார்ப்பையும் மிகச்சரியாக கணித்து அதனை செயல்படுத்தி அதில் வெற்றிபெறுவதென்பது அரசியலில் பழுத்த அனுபவமும்,சிறந்த ஆற்றலும் ,மக்களின் நாடித்துடிப்பை அறியும் ஞானமும் கொண்ட அரசியல் தலைவர்களால் மட்டுமே முடியக்கூடிய ஒன்றாகும்.அந்த வகையிலே விவசாயிகளின் துயரங்களை சரியாக கணித்து அத்துயரங்களை களைய "கடன் தள்ளுபடி" அறிவிப்பை தேர்தல் வாக்குறுதியாக அளித்து,பதவியேற்ற அன்றே கையெழுத்திட்டு ,இதோ நடைமுறைக்கு வந்துவிட்ட இச்சாதனையை செயல்படுத்திகாட்டிய மாண்புமிகு தமிழக முதல்வர் "கலைஞர்" அவர்களுக்கு மிக்க நன்றி.இந்த அறிவிப்பு குறித்து சில பத்திரிக்கைகளில் பல சந்தேகங்கள் எழுப்பபட்டாலும்,அனைத்தையும் முறியடித்து சொன்னதை சொன்னபடி செய்து விவசாயிகள் முகத்தில் புன்னகை அரும்ப காரணமானார் தமிழக முதல்வர்.இந்திய நாட்டிலே பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலைகள் நிகழ்ந்துவரும் நிலையிலும் தமிழகத்தில் நிகழாத காரணமான "இலவச மின்சாரம் "பல ஆண்டுகளாக வழங்கப்பட்டுவர ஆணையிட்டும்,கடன் சுமையை நீக்க "கடன் தள்ளுபடி" செய்து தற்போது ஆணையிட்டும் "விவசாயிகள் தற்கொலை"தமிழகத்தில் நிகழாவண்ணம் காத்த தமிழக முதல்வர் "கலைஞர்" அவர்களின் இந்த இரு சாதனைகளும் விவசாயிகளின் மனதில் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும்.

2 கருத்துகள்:

மா சிவகுமார் சொன்னது…

முதல்வரின் இந்த நல்ல முடிவு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கைச் சுமைகளை ஓரளவாவது குறைக்கும் என்று வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

Unknown சொன்னது…

இதை வரவேற்கும் இந்நேரத்தில் தற்போது சாகுபடி தொடங்கவிருப்பதால் உரிய காலத்தில் பயிர்க்கடன் தர ஏற்பாடு செய்தல் அவசியம்.அதை உடனடியாக செய்தல் விவசாயிகளுக்கு மிகுந்த பயனை அளிக்கும்.