திங்கள், ஆகஸ்ட் 07, 2006

லாபகணக்கு

சில வருடங்களுக்கு முன் தமிழகத்தின் புகழ்பெற்ற விவசாய பல்கலைகழகத்தில் ஒரு வாரம் விவசாயம் பற்றிய பயிற்சி பெற சென்றிருந்தேன்.தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து சுமார் 30 விவசாயிகள் கலந்துகொண்டனர்.

நெல் பயிர் குறித்த பயிற்சியின்போது பேராசிரியர், நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு பல ஆராய்ச்சிகள் செய்து பல தொழில் நுட்பங்களை வெளியிடுகிறோம் ஆனால் அதையெல்லாம் விவசாயிகள் பயன்படுத்துவதில்லை என வருத்தப்பட்டார்.

உடனே நான், ஐயா உங்களிடம் ஏராளமான நிலம் உள்ளது.நவீன தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வைத்துள்ளீர்கள்,புகழ் பெற்ற ஆராய்சியாளர்கள் உங்கள் வசம் உள்ளார்கள், இந்த நுட்பங்களை வைத்து உங்கள் நிலத்தில் பயன்படுத்தினால் நிச்சயம் பெருத்த லாபம் உங்கள் கணக்குபடி கிடைத்திருக்க வேண்டும் அப்படியென்றால் அது போன்ற லாபகணக்கு பற்றிய விபரம் உங்களிடம் உள்ளதா என வினவினேன்.

இந்த கேள்வி அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்ந்தேன்.அவர் மழுப்பலாக இங்கே தண்ணீர் வசதி குறைவு,இரண்டு நாள் நீர் பாய்ச்சவில்லை எனில் நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் ஏதோ சொல்லி சமாளித்தார்.

இத்தனை வசதி வாய்ப்புகள் உள்ள நிலையிலும் லாபகணக்கு குறித்து அவரால் பதில் அளிக்கமுடியாது என்பதே விவசாயம் பற்றிய உண்மை நிலை எனில் வசதி வாய்ப்புகள் அற்ற விவசாயிகளின் நிலமை?

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சரியான கேள்வி. சும்மா குறுந்தாடியத் தடவிக்கிட்டு, வரிப்பணத்துல மாதந் தவறாம சம்பளம் வாங்கத்தான் விஞ்ஞானிகள் லாயக்கு.

மா சிவகுமார் சொன்னது…

நம் மண்ணுக்குப் பொருந்தாத ஆராய்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் இறக்குமதி செய்து நம் மீது திணிக்கிறார்கள். அந்த இறக்குமதி வெளி நாடுகளிலிருந்து மட்டும் இல்லாமல், நம் ஊர் ஆய்வகங்களிலிருந்தும் வருகின்றன என்று தெரிகிறது.

அப்படி இல்லாமல் களத்தில் வேலை செய்து விவசாயிகளுக்கு உதவும் ஆராய்ச்சிகள் இருக்கின்றனவா?

அன்புடன்,

மா சிவகுமார்

பிகு: மாதத்துக்கு ஒரு பதிவுதான் என்று முடிவு செய்திருக்கிறீர்களா என்ன?

ஸ்ரீ சொன்னது…

ஒட்டுமொத்தமாக விஞ்ஞானிகளை குறை கூறுவது எனது நோக்கமல்ல,ஆனால் எந்த ஒரு நவீன தொழில்நுட்பமும் அத்துறையில் ஈடுபடும் மக்களை வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.குறிப்பாக லாபத்தை வழங்க கூடியதாக அது இருக்கவேண்டும்.ஆனால் விவசாயத்தை பொறுத்தமட்டில் இது நேர் மாறான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது என்பதே எனது எண்ணம்.அதுமட்டுமல்ல செலவு குறைந்த, விவசாயிகளின் வீடுகளில் தானியங்கள் நிறைந்திருந்த, மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்க காரணமான, பாரம்பரிய விவசாயம் இன்று பாழ்பட்டு போக விஞ்ஞானிகளும் ஒரு காரணம்.

ஸ்ரீ சொன்னது…

நன்றி சிவா மற்றும் அனானி நண்பர்களுக்கு,
சிவா உண்மையில் எனக்கு வியப்பாக உள்ளது.எப்படி உங்களால் சளைக்காமல் பதிவுகளை எழுத முடிகிறது.அந்த ரகசியத்தை எனக்கு கற்றுத்தாருங்களேன். நமக்கு ஒரு சிறிய பின்னூட்டம் இடுவதென்றாலும் குறைந்தது 2 மணி நேரம் தேவைப்படுகிறது.பின் எப்படி அடிக்கடி பதிவுகளை எழுதுவது?