புதன், ஜூலை 17, 2013

என் கேள்விக்கு என்ன பதில்?

சுமார் பத்து ஆண்டுகால நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பிரம்மாண்டமாய் உள்ளது.உலகம் உங்கள் கையில்,உலகம் சுருங்கிவிட்டது என்றெல்லாம் இவ் வளர்ச்சிபற்றி பேசப்படுகிறது.ஒருசில வினாடிகளில் உலகின் எந்த பகுதியையும் தொடர்பு கொள்ளலாம் என்பது நனவாகியுள்ளது.(ராஜிவ்காந்திக்கு நன்றி).மேலும் இந்தியாவில் உலக தரத்திலான சாலைவசதிஏற்படுத்த பட்டுள்ளது.கிராம சாலைகள் எல்லாம் சிமெண்ட் சாலைகளாக மாற்றபட்டுள்ளன. (வாஜ்பாய்க்கு நன்றி).ஆக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும்,அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.இதனால் எந்த இடத்தையும் எந்த நபரையும் தொடர்பு கொள்வது மிக எளிதாகிவிட்டது.ஆனால் இவற்றின் தாக்கங்கள் ஏன் மற்ற துறைகளின் மீது மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்பதே என் கேள்வி.குறிப்பாக என் மனதில் நீண்டநாட்களாக உள்ள கேள்வி என்னவென்றால் இவ்வளவு வளர்ச்சிகள் ஏற்பட்டபோதும் ஏன் தற்போது உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ - போன்ற மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்ககூடாது? இல்லையெனில்  இவ்வாறான வளர்ச்சியின் உண்மையான பயன்தான் என்ன?

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மக்கள் பிரதிநிதிகளை பாதியாக ஏன் குறைக்கவேண்டும்? அது மேலும் சுமை தான் அவருக்கும், மக்களுக்கும். ஏற்கனவே யாரையும் பார்க்கவே முடிவதில்லை, இதில் குறைப்பு அவர்களை மேலும் உயர்த்திவிடும். தொகுதி முறைகளை ஒழித்து விட்டு மாவட்டத்துக்கு நான்கு, ஐந்து மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வர வேண்டும்.

TBR. JOSPEH சொன்னது…

கிராம சாலைகள் எல்லாம் சிமெண்ட் சாலைகளாக மாற்றபட்டுள்ளன.//

எங்க ஊருக்கு (ஆவடி, சென்னையிலிருந்து இருபதே கி.மீ) வந்து பாருங்க. களிமண் சாலை கூட இல்லை. ஒடச்சி போட்டு ரெண்டு வருசம் ஆகுது. கேட்டா பட்ஜெட் இல்லையாம்!

இங்கன்னு இல்லீங்க தமிழகத்துல பல மாவட்டங்களிலும் இதே நிலைதான். என்னுடைய சொந்த மாவட்டமான தூத்துக்குடியிலும் இந்த லட்சணத்தில்தான் சாலைகள் உள்ளன.

ஸ்ரீ சொன்னது…

வாருங்கள் நிரஞ்சன் தம்பி சார்,ஒரு தொழிற்சாலையில் நவீன கருவிகள் புகுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்போது ஏற்கெனவே வேலைசெய்த தொழிலாளர்கள் குறைக்கப்படுகிறார்கள்.அதே "பார்முலா"வை ஏன் இங்கு பயன்படுத்தகூடாது?

ஸ்ரீ சொன்னது…

வணக்கம் ஜோசப் சார்,எங்கள் பகுதியில் பெரும்பான்மையான் கிராமங்களில் சிமென்ட் சாலைகள் அமைக்கபட்டுள்ளன.நீங்கள் சொல்வதும் உண்மையே.