ஞாயிறு, அக்டோபர் 15, 2006

தேவையா தேர்தல்?

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றுமுடிந்தாலும் பெரும்பாலோர் மனதில் இத்தேர்தல் தேவையா என்ற கேள்வி எழும் வண்ணம் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது கவலை அளிக்கிறது.

சாதாரண பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு கூட பல பேர் போட்டியிடுவதும் எப்படியும் வெற்றிபெறவேண்டும் என்ற வெறியில் பணம் தண்ணீராய் செலவு செய்யப்படுவதும் ஜனநாயக நடவடிக்கையா?

கிராமத்து மக்களிடம் இருந்த ஒற்றுமையை அழிக்கும்,ஒரு தெருவில் உள்ள மக்களிடம் கூட விரோதத்தை வளர்க்கும் இத்தேர்தலினால் என்னபயன்?எதை எதிர்பார்த்து இத்தகைய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைக்கின்றனர்?

இத்தகைய அமைப்புகளுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி 100 % நேர்மையான வழியில் நியாயமாக செலவு செய்யப்படுவது உறுதிசெய்யபடும் வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கை அமைந்துவிட்டால் அடுத்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேடிப்பிடிக்கும் நிலைக்கு அரசியல்கட்சிகள் தள்ளப்படுவது நிச்சயம்.

5 கருத்துகள்:

மனசு... சொன்னது…

கண்டிப்பாக தேர்தல் தேவைதான்... ஆனால் தேர்தல் அநாகரீகங்கள் தேவையில்லை. ஒரே வார்டில் ஒரே தெருவில் 3 அல்லது 4 பேர் ஒரு பதவிக்கு போட்டியீடுவதற்கான காரணம் என்ன? மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என 4 பேரும் நினைத்தால் ஒன்னா உக்காந்து சேர்ந்து பேசி ஒரு ஆள தேர்வு பன்னி பண்ணலாமில்லையா...? ஆனா ஏன் நாலு பேரும் வரிஞ்சு கட்டிட்டு போட்டி போடறாங்க... அங்க அவங்க நல்லது செய்யனும்கற காரணத்தையும் மீறின காரணமும் ஒன்னு இருக்குங்கறது ஒன்னு தெரியுது... இன்னிக்கும் பாலமேடு-ங்கற கிராமத்தில 3 பேற மக்களே தேர்தலுக்கு முன்னாடி தேர்வு பண்ணிட்டாங்க... தேர்தல் தேவையில்லைனு அவங்களே முடிவு பண்ணி அவங்களுக்கு நம்பிக்கையானவங்கள தேர்ந்தெடுத்துருக்காங்க... பாலமேடு எங்க இருக்குனு கேக்குறிங்களா? அலங்காநல்லூரில இருந்து ஒரு 10 கிலோமீட்டர்தான்... எங்க ஊருதாங்க... அங்க மக்கள்கிட்ட ஒற்றும இருக்கு வேற ஒன்னுமில்ல...

அன்புடன்,
மனசு...

ஸ்ரீ சொன்னது…

மனசு அவர்களே ,
உங்கள் வருகையும், உங்கள் கிராமத்தின் ஒற்றுமையும் மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றன. இன்றைய கிராமங்களில் ஒற்றுமையும்,பொதுநலனும் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன.ஒரு காலத்தில் உங்களது கிராமத்தை போலே ஒற்றுமையாய் இருந்த எங்கள் கிராமத்து மக்கள் இன்று அதனை இழந்து வேறுபட்டு நிற்க அரசியல் கட்சிகளும்,இது போன்ற தேர்தல்களும் ஒரு வகையில் காரணமாய் அமைந்துவிடுகிறதே என்ற ஆதங்கம்தான் எனது இந்தபதிவு.
அன்புடன் ஸ்ரீ

குழலி / Kuzhali சொன்னது…

//கிராமத்து மக்களிடம் இருந்த ஒற்றுமையை அழிக்கும்//
எது ஒற்றுமை என்கிறீர்கள்? ஒருவன் ஓங்குவது ஒருவன் ஒடுங்கிப்போவதுமா? இன்னும் கேட்டால் இந்த உள்ளாட்சி தேர்தல்கள் வீச்சமெடுத்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் போன்ற மேலுக்கு ஒற்றுமையாகவும் உள்ளுக்குள்ளே ஒடுக்கியும் வைத்திருந்தது தெரியவந்தது, இன்றைய தேதியில் எந்த கிராமத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள், போட்டியின்றி தேர்வு செய்கிறார்கள் என்றால் அங்கே யாரோ யாருக்கோ அடிபணிகிறார்கள் என்று அர்த்தம், இதற்காகவெல்லாம் உள்ளாட்சி தேர்தல் வேண்டாமென்றால் நாட்டில் எந்த தேர்தலுமே நடக்க முடியாது.

பாது சொன்னது…

வணக்கங்க,
...ஒரு 1000 ஓட்டுக்கள் உள்ள சிற்றுரில்
ஒரு வேட்பளர் எவ்வளவு செலவு செய்வார்னு நினைக்குவீங்க, எனக்கு தெரிந்து ஒருவர் ஒன்றறை லட்ச ரூபாய் செலவு செய்தார்,மற்றொருவர் ரூ-60,000, ரூ-50,000 ஆயிரங்கள் செலவு செய்தனர் நம்பமாட்டீங்களா
வேட்புமனு தாக்கல் செய்த நாள்முதல்
ஊரில் உள்ள குடிமகன்களுக்கு அவர்கள் தான் தண்ணி சப்ளை!
ஒரு ஓட்டுக்கு ரூ-200 கொடுத்தாலும்
இவ்வளவு செலவாகாதே என்றபோது அவர் சொன்னார் எதிர்க் கட்சிக்காரன்
போட்டுக் கொடுத்திடுவான் என்று
ரகசியமாய், நயமாய் பேசிப்பாருங்கள்
6மாதத்தில் போட்ட பணத்தை எடுக்கும் விதத்தைக் கூறுவார்கள்..
ஊருக்கு அவர்கள் செய்ததாக, செய்வதாகக் கூறுவதை இப்போதெல்லாம் மக்கள் நம்புவதில்லை
5 வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடும்
திருவிழாவாகத்தான் தேர்தலையும் பார்க்கக் கற்றுக் கொண்டனர்.
குடும்ப வாரியாக, சாதி வாரியாக, இன, மத வாரியாக ஓட்டுக்கள் பிரிகின்றது, பிரிக்கப் படுகின்றது
பாமரர்கள் கூலிவேலை செய்கின்றவர்கள் ஒருநாள் கூலி கொடுப்பவர்களுக்கு பேடவேண்டியதுதான் என்று கூறுகின்றனர்...

ஸ்ரீ சொன்னது…

வாங்க குழலி சார்,ஒற்றுமைக்கும் ஒடுங்களுக்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன. ஒற்றுமையாக ஒருவரை தேர்வு செய்கிறார்கள் என்றால் உங்கள் பார்வையில் அது அடிபணிவது எனில் உலகில் நடப்பவையெல்லாம் இதுதானே.தேர்தலே வேண்டாம் என கூறவில்லை.இக்கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதே என் கருத்து.