ஞாயிறு, செப்டம்பர் 28, 2014

ஒரு குற்றம்-பல தண்டனை தேவையா?

தமிழக முதல்வருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டு,தண்டனைகள் அறிவிக்கப்பட்டு ,இது குறித்து பல விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து எனது கருத்து.

 தவறு செய்தவர்கள் தண்டனையை எதிர்கொள்ளவேண்டும் என்பது உண்மைதான் எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பதவி வகிக்கும் ஒருவரை 16 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில் இப்போது சிறையில் அடைப்பது நியாயமா?

ஏனெனில் வருமானத்துக்கு மீறி சொத்து குவித்தது தவறுதான் எனினும் இந்த ஒரு குற்றத்துக்காக தமிழக முதல்வருக்கு எதிராக மூன்றுவகை தண்டனை தேவையற்றது என்பதே என் கருத்து.

சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு, இதனால் முதல்வர் பதவியும் இழப்பு, 100 கோடி ரூபாய் அபராதம்  . 6(அ) 10 வருடம் தேர்தலில் நிற்க தடை. , இவையே ஒரு அரசியல் தலைவருக்கு மிகப்பெரிய தண்டனைதான்.

இத்தனைக்கும் மேல் 4 வருடம்  சிறை தண்டனைஎன்பது தேவையா?என்பதே என் கேள்வி.

7 கருத்துகள்:

bandhu சொன்னது…

தண்டனை 4 வருட சிறை மற்றும் 100 கோடி அபராதம் மட்டுமே. 2 வருடமும் அதற்க்கு மேலும் தண்டனை பெற்றவர் எம் எல் எ பதவி இழப்பார் என்பதால் மற்ற இரண்டு தண்டனைகளும். அதனால், ஒன்றை விட்டு ஒன்றை கொடுக்க முடியாது. 100 கோடி அபராதம் மட்டும் என்றிருந்தால் மற்றவை எல்லாம் இருந்திருக்காது. அதை மட்டும் கொடுத்திருக்கலாம். சொத்தை முழுமையாக ஜப்தி செய்திருந்தாலும் அது நல்ல தீர்ப்பாகவே இருந்திருக்கும்

Unknown சொன்னது…

ஒரு குற்றம் அதிக அளவில் நடக்கும் போது, அதற்கான தண்டனையை அதிகப்படுத்துவது சரிதானே? பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கான தண்டனை இங்கு அதிகம். ஜெயலலிதாவை அவரின் ஒரு மந்திரி வஞ்சித்தால் , ஒரு தண்டனையோடு அவர் நிறுத்தி கொள்வாரா?

ஸ்ரீ சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி பந்து அவர்களே,என் கருத்தும் அதேதான்.அபராத்தை கூட இன்னும் அதிகம் கொடுத்து சிறை தண்டனையை நீக்கியிருக்கலாம்.பொது வாழ்வில் உள்ளவர்களை(பொருளாதார குற்றங்களுக்காக)
)ஜெயிலில் அடைப்பது தேவையில்லை என்பதே என் கருத்து.

ஸ்ரீ சொன்னது…

நன்றி ராமா, இதே குற்றம் புரிந்த பலர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப தெரிந்த வித்தையை அறிந்ததனால் சுதந்திரமாக உள்ளனர் .பொருளாதார குற்றங்களுக்கு சிறை தண்டனையை விட சொத்து பறிமுதல், அபராதம், பதவி இழப்பு போன்றவை எந்த அளவு அதிகபடுத்தி வழ்ங்கினாலும் பொருத்தமாயிருக்கும் என்பதே என் எண்ண்ம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

அப்போ கோழி திருடிய சாமானியனை சிறையில் அடைக்க வேண்டும் . சகல வசதியோடு வாழ்ந்த முதல்வரை மன்னிக்கவேண்டும். இது தானே உங்கள் தீர்ப்பு.
நான் நினைக்கிறேன் . எவருக்குமே தீர்ப்பில் வேறு பாடு வேண்டாம். ஜெயலலிதாவுக்கு ஆயுள் தண்டனையும், முழுச் சொத்தும் பறிமுதல், இனிமேல் எப்போதும் தேர்தலில் பங்கேற்க முடியாது. எனத் தண்டனை கொடுக்க வேண்டுமென்பதுடன் , தாத்தா குடும்பத்திற்கும் தயவு தாட்சண்யம் முகமன் என எந்த சலுகையுமின்றி கடும் தண்டனை கொடுக்க வேண்டுமென்பதே, நீதிக்கு அழகு!
நிதிகள் கனிகள்,ராசாக்கள் எல்லோரையும் அரசியலில் காலத்துக்கும் ஈடுபடமுடியாத வகையில் தண்டனை அமைய வேண்டும்.
நம் நாடுகளில் நடக்குமா?
அம்மாவின் ராஜ குரு சோ சொல்கிறார். சட்டத்திலுள்ள ஓட்டையால் அம்மா வெளியே வந்திருவாவாம், அவர் எதிர்கால அரசியல் இத் தீர்ப்பால் இன்னும் பிரகாசமாகுமாம்.
இது என்ன? நாடு...என்னே ...சட்டம், மண்ணாங்கட்டித் தீர்ப்பு...இதுக்கு 18 வருசம்... பலகோடி செலவு...தூ

? சொன்னது…

//இது என்ன? நாடு...என்னே ...சட்டம், மண்ணாங்கட்டித் தீர்ப்பு...இதுக்கு 18 வருசம்... பலகோடி செலவு...தூ//

மல்லாக்க படுத்துகிட்டு துப்பறதுங்கறது இதுதான். இந்த மாதிரி தலைவனுங்களுக்கு ஓட்டு போடுறது நம்மதானே. இவ்வளவுக்கு பொறவும் தமிழ் சனம் அவனுங்களுக்குதான் ஓட்டுப்போட்டு தேர்தெடுக்கும். அது சரி இலவசத்துக்காவும் இருநூறு ரூபாய்க்காவும் ஓட்டுப்போடும் பிச்சைக்காரர்கள் கூடி வேறு யாரை தேர்ந்தெடுக்க முடியும்?

ஸ்ரீ சொன்னது…

வணக்கம் யோகன் சார், ஒவ்வொரு நேர்மையான மனிதனின் எண்ண பிரதிபலிப்பை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.பஞ்சாயத்து உறுப்பினர் பதவி முதல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வரை உள்ள மக்கள் பிரதிநிதிகளால் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கவே முடியாது என்ற நிலை வரும் வரை இது தொடர்கதையாகவே இருக்கும்.