நடப்பு திட்ட காலத்தில் எதிர்பார்க்கபட்ட வேளாண்வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கும் என கணக்கிடபட்டுள்ளது.இது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு நிச்சயம் வழிவகுக்கும்.
இந்த வீழ்ச்சிக்கான காரணம் அரசு போதுமான கவனத்தை விவசாயத்துறைக்கு வழங்கவில்லை என்பதையே பிரதிபலிக்கிறது.
இந்தியாவில் 1993 முதல் 2003 ஆண்டுவரை 100000 (ஒரு லட்சத்திற்கும்) மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்என தகவல்கள் தெரிவிக்கின்றன
விவசாய தற்கொலைகள் தீவிரமாய் இருக்கும் விதர்பா பிராந்தியத்துக்கு விஜயம் செய்த பிரதமரை பார்த்து விவசாயிகள் கதறி அழுத காட்சிகள் வேதனையாக இருந்தன.
ஆனால், பதவி பறிப்பு சட்டத்துக்கு ஜனாதிபதியின் கையெழுத்து வேண்டி அவரை நிர்பந்தித்ததில் காட்டிய அவசரத்தனமும்,அதில் வெற்றிபெற்று தங்கள் பதவியை காப்பாற்றி கொண்டதும்,சலுகை மழையிலும்.சம்பள உயர்விலும், முழுக்க நனைய தங்களுக்கு தாங்களே ஆணையிட்டுக்கொண்ட சுய நலமும்,இதுவரை பாராளுமன்றத்தில் நடைபெறாத வகையில் மோசமான வார்த்தைகளாலும் ,கேவலமான நடத்தைகளாலும் கட்சிகள் ஒன்றுக்கொன்று தாக்கிகொண்ட இத்தகைய மக்களின் நலனுக்கான அத்தியாவசிய நடவடிக்கைகளோடு நாடாளுமன்ற கூட்டத்தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடித்துவைக்கபட்டுள்ளது.வாழ்க ஜனநாயகம்.
7 கருத்துகள்:
சரியான தலைப்பு... சரியான பதிவு...
செவிட்டில் அறைந்தது போல நீங்க்ள் எழுதியுள்ளீர்கள்....
ஆனால், எதுவுமே காதில் விழாதது போல ஒரு ப்லாக் சமூகம் நம் அருகிலேயே சொரனையற்று இயங்கிக் கொண்டிருக்கிறது....
விவசாயிகள் நாதியற்று அத்துக் கூலிகளாக நவீன நாடோ டிகளாக நகரங்களுக்கு நகர ஆறு மாதம், கிராமம் ஆறு மாதம் என்று அலைகழிக்கப்படுகிறார்கள்....
இவர்களின்(இந்தியாவின் 60% மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை) கோபம் சரியாக வழி நடத்தப்படவில்லை எனில் மிகப் பெரும் சமூக உள்முரன்பாடுகள் பாற்பட்ட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும்....
இந்த குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையின் அருகில் தான் கோகோ கோலா குடித்துக் கொண்டு குதூகாலாமாக காலத்தை ஓட்டிவிடலாம் என்று கன்வு கண்டு கொண்டிருக்கிறது யுப்பி வர்க்கம்......
சீக்கிரம் சொரனை வரும்..... இது இந்த சமூகத்தின் விதி....
மிக்க நன்றி அசுரன் அவர்களே,ஊக்கம் அளித்திடும் உங்கள் கருத்துக்களுக்கு தலைவணங்குகிறேன்.blog சமூகத்தை குறைகூறி பயனென்ன?அவர்களின் சிந்தனைகள் மேல் நோக்கிய பார்வையை மட்டும் கொண்டவை. இத்தனை இன்னல்களுக்கு நடுவிலும் மரக்கட்டைகளாய் உணர்ச்சியற்று,அதனை எதிர்த்து போராட துணிவற்ற விவசாய சமுதாயத்தை நினைத்துதான் வருந்துகிறேன்.
//இவர்களின்(இந்தியாவின் 60% மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை) கோபம் சரியாக வழி நடத்தப்படவில்லை எனில் மிகப் பெரும் சமூக உள்முரன்பாடுகள் பாற்பட்ட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும்....//
உண்மைதான் எனக்கும் இது குறித்த அச்சம் உள்ளது.
கொடுமை.
சொரணையற்ற சமுதாயம்.
இன்னும் சட்டசபையில் குஷ்பூ குறித்து பேசத்தான் தெரிகிறதே தவிர விவசாயி என்ன பாடுபடுகிறான் என்று பேச நாதியில்லை.
http://masivakumar.blogspot.com/2006/09/blog-post_115710176487712084.html
வருகிற இயலாமைக்கு இந்த அமைப்புகள் எல்லாம் தகர்ந்து போய் விட மாட்டாவா என்று பொங்குகிறது. அசுரன் சொல்வது போல காடாறு மாதம், நாடாறு மாதம் என்று அல்லலுறும் சகோதர சகோதரிகளின் வலி குளிரூட்டப்பட்ட அறையில் திட்டம் போடும் அரசு வாதிகளுக்குப் புரிய வேண்டும்.
மா சிவகுமார்
விவசாயிகளை மனிதர்களாகவே மதிக்காத நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஸ்ரீ
தமிழ்நாட்டில் விவசாயிகள் இந்த அளவில் முன்னேறக்காரணமாயிருந்த நாராயணசாமி நாயுடு போன்ற தலைவர்கள் இல்லாதது மிகப்பெரும் குறை
விவசாயிகளுக்கான பதிவினை வரவேற்கிறேன். நன்றி ஸ்ரீ
வாருங்கள் கல்வெட்டு சார்,எங்கள் உணர்வுகளுக்கு ஆறுதல் அளிக்கும் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சிவா,விவசாயிகளின் வலியை உண்மையில் புரியாத அரசியல்வாதிகளுக்கு புரியவைப்பது சுலபம்.ஆனால் அவ்வாறு நடிப்பவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?
வணக்கம் மதுமிதா,ரொம்ப சந்தோஷம்.விவசாயிகளை விழிப்படைய செய்ய ,ஒன்றுபடுத்த திறமை கொண்ட,தன்னலமற்ற ,நாயுடு போன்ற வலிமை மிக்க தலைவர்கள் இன்று இல்லாதது மிக பெரிய குறைதான்.சுமார் 25 வருடங்களுக்கு முன் பள்ளி இறுதி வகுப்பில் படித்துகொண்டிருந்த காலத்தில் எங்கள் மாவட்டதலைநகரில் அவரது தலைமையில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.அரசாங்கமே அங்கு கூடிய லட்சக்கணக்கான விவசாயிகளின் எழுச்சியை கண்டு அஞ்சிய காலம் அது. ஆங்கிலேய அடக்குமுறைகளை விஞ்சிடும் வகையில் விவசாயிகளின் பிரச்சினைகளை அவர் பேச தடை விதித்து அவருக்கு அன்றைய அரசு வாய் பூட்டு சட்டம் போட்டு அடக்குமுறையை ஏவி ஒடுக்கியபோதும் சிறிதும் கவலைபடாமல் கருத்துக்களை மேடையில் பேசி முழக்கமிட்டு விவசாயிகளின் உரிமைகளை உணரசெய்த நிகழ்வு இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது.அவர்தொடங்கிய பணி நிறைவுபெறுமுன் அனால் அவரின் மறைவு விவசாயிகளுக்கு ஆதரவற்ற நிலையை ஏற்படுத்திவிட்டது.அவரை இத்தருணத்தில் நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி.
கருத்துரையிடுக